வீட்டுக்குள் அழுகிய நிலையில் புகைப்படக்காரர் பிணம்
வீட்டுக்குள் அழுகிய நிலையில் புகைப்படக்காரர் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பாகூர்,
பாகூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்சண்முக சுந்தரம்(வயது 27), இவர்புகைப்படக்காரர். இவருடையமனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சண்முகசுந்தரத்துடன் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவரது மனைவி சுகந்தி பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து சண்முகசுந்தரம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தவர் அதன் பிறகு வெளியே வரவே இல்லை. இந்தநிலையில் அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த வீட்டின் கீழ்தளத்தில் குடியிருக்கும் நாகம்மாள் என்பவர் சண்முக சுந்தரத்தின் உறவினர்ஆனந்தனுக்கு தகவல்கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அழுகிய நிலையில் சண்முகசுந்தரம்பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதுகுறித்து பாகூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புகைப்படக்காரர் சண்முகசுந்தரம் இறந்தது எப்படி? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story