மத்திய அரசின் ‘உதான்’ திட்டத்தின் கீழ் கலபுரகி-பெங்களூரு இடையே நேரடி விமான சேவை மைசூரு வரை இயக்கப்படுகிறது
மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின் கீழ் கலபுரகி-பெங்களூரு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின் கீழ் கலபுரகி-பெங்களூரு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அது மைசூரு வரை இயக்கப்படுகிறது.
70 இருக்கைகள்
கர்நாடகம்-தெலுங்கானா மாநில எல்லையில் பெங்களூருவில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கலபுரகி மாவட்டம். வட கர்நாடகத்தில் அமைந்துள்ள கலபுரகியில் மத்திய அரசு மாநில அரசின் உதவியுடன் புதிதாக விமான நிலையத்தை அமைத்தது. அந்த விமான நிலையத்தை சமீபத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மத்திய அரசின் ‘உதான்‘ திட்டத்தின் கீழ் கலபுரகியில் இருந்து பெங்களூரு, மைசூருவுக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம், இந்த சேவையை நேற்று தொடங்கியது. 70 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் நேற்று கலபுரகியில் இருந்து புறப்பட்டு பெங்களூரு வந்தது.
6 நாட்கள் சேவை
வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களில் இந்த விமான சேவை வழங்கப்படுகிறது. கலபுரகியில் இருந்து புறப்படும் விமானம் பெங்களூருவுக்கு வந்து பிறகு மைசூரு செல்லும். அதே போல் மைசூருவில் இருந்து விமானம் புறப்பட்டு பெங்களூரு வந்து பிறகு கலபுரகி செல்லும். இதற்கான பயண நேரம் 3 மணி நேரம். கலபுரகியில் இருந்து சாலை வழியாகவோ அல்லது ரெயில் மூலமாகமோ மைசூருக்கு வர வேண்டுமென்றால் குறைந்தது 13 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story