தாராபுரம் ஒன்றியத்தில் வாக்குச்சீட்டில் முத்திரை மாறியிருந்ததால் வாக்குப்பதிவு 1¾ மணி நேரம் நிறுத்திவைப்பு
தாராபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பழனிக்கவுண்டன்வலசு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டில் வைக்கப்படும் முத்திரை (சீல்) மாறியிருந்ததால் 1¾ மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
தாராபுரம்,
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 63 ஆயிரத்து 67 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவிற்காக ஊராட்சி ஒன்றியம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் மொத்தம் 141 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தல் பணிக்காக சுமார் 700 பேர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணி நேர நிலவரப்படி 13.74 சதவீதம் வாக்குப் பதிவானது. 11 மணிக்கு 27.09 சதவீதமும், மாலை 3 மணிக்கு 59.03 சதவீதமும் பதிவானது.
நல்லாம்பாளையம் ஊராட்சியில், பழனிக்கவுண்டன்வலசு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வாக்குச்சாவடி எண் 56 அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் தென்னரசு சென்றார். வாக்குச்சாவடியில் அவருடைய ஆவணங்களை சரிபார்த்த அலுவலர்கள் அவருக்கு வாக்குச்சீட்டுகளை கொடுத்தனர். பிறகு அவர் வாக்களிப்பதற்காக சென்றபோது, அங்கிருந்த தேர்தல் பணியாளர், ஏரோமார்க் முத்திரை (சீல்கட்டை) ஒன்றில் நீலநிற மையை தொட்டு கொடுத்தார்.
அதை அவர் வாக்குச்சீட்டில் சீல் வைத்தபோது ஏரோ மார்க் பதிவாவதற்கு பதிலாக, ஒரு சதுரவடிவ அடையாளம் பதிவானது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தென்னரசு, வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்களிடம் விபரம் கேட்டார். ஆனால் அலுவலர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. வாக்குச்சீட்டில் வைக்கப்படும் சீல் கட்டையில், ஏரோ மார்க் இடது புற சுழற்சியில் இருக்க வேண்டும் என்பது தேர்தல் விதி, ஆனால் ஏரோ மார்க் சீலே இல்லாமல் சதுரவடிவில் சீல் இருந்ததால், வாக்குகள் செல்லாமல் போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. இதனால் அவர் வாக்களிக்காமல் வெளியே சென்றுவிட்டார்.
சீல் கட்டை மாறியிருப்பது தெரிந்ததும் அங்கிருந்த வாக்காளர்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்கு வந்து சீல் கட்டை மாறியிருப்பதற்கு முழுமையான விளக்கம் அளித்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று வாக்காளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பாதுகாப்பு கருதி வாக்குச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதன் பிறகு மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு குணசேகரன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் கஜலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்கணேஷ்மாலா, துணை தேர்தல் நடத்தும் அலுவலர் ஞானசேகர் மற்றும் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
சீல் கட்டையில் இருந்த ரப்பர் முத்திரை அதில் இருந்து கழன்று கீழே விழுந்திருக்கலாம். வாக்குச்சீட்டில் சரியான இடத்தில் நீலநிற மை பதிவாகி இருந்தால் போதும், அதை வாக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று வாக்காளர்களிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட வாக்காளர்கள் பிறகு வரிசையில் நின்று வாக்களித்தார்கள். இதனால் வாக்குப்பதிவு மதியம் 1.45 மணி முதல் 3.30 மணி வரை என 1.45 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story