பரமக்குடி அருகே, ஊருணியில் மூழ்கி 2 மாணவிகள் பலி - குளிக்க சென்றபோது பரிதாபம்


பரமக்குடி அருகே, ஊருணியில் மூழ்கி 2 மாணவிகள் பலி - குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 28 Dec 2019 4:00 AM IST (Updated: 28 Dec 2019 6:12 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே குளிக்க சென்ற 2 மாணவிகள் ஊருணியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தபாண்டி. இவரது மகள் காவியா(வயது 8). அங்குள்ள யூனியன் தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

அதே கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் என்பவரது மகள் தேசிகா(5). இவரும் அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். அய்யம்பெருமாள் ஏற்கனவே இறந்து விட்டார். தாயாரும் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வருகின்றார். தேசிகா அவரது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு காவியாவும், தேசிகாவும் அங்குள்ள ஊருணியில் குளிக்க சென்றனர். எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. நீண்ட நேரமாகியும் மாணவிகள் வீட்டிற்கு வராததால் அவர்களை வீட்டில் தேட தொடங்கினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஊருணியில் 2 சிறுமிகள் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து அங்கு அவர்கள் சென்று பார்த்த போது இறந்தது காவியாவும், தேசிகாவும் என உறுதியானது. சிறுமிகளின் உடலை பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதனர். பரமக்குடி தாலுகா போலீசார் இறந்த மாணவிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story