புதுப்பேட்டை அருகே, ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி


புதுப்பேட்டை அருகே, ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 28 Dec 2019 3:45 AM IST (Updated: 28 Dec 2019 6:16 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் கோடிசுந்தரம் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவருக்கு ஆனந்தி என்கிற மனைவியும், லோகே‌‌ஷ், ஆகா‌‌ஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, கோடி சுந்தரம் அதே பகுதியில் உள்ள ஏரியில் கை, கால்களை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கோடி சுந்தரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோடிசுந்தரத்தின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story