திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம்
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் இரவில் அய்யா வைகுண்டருக்கும், சப்தகன்னிமார்களுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
தொடர்ந்து பக்தர்கள் அய்யா வைகுண்டருக்கு சீர்வரிசை கொடுத்து வழிபட்டனர். பக்தர்கள் மகாராஜன், ராஜன், ஸ்ரீமதி பாலகிருஷ்ணன் ஆகியோர் திருக்கல்யாண திருஏடு வாசித்தனர்.
இன்று பட்டாபிஷேகம்
விழாவில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர் அய்யாபழம், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், வரதராஜ பெருமாள், செல்வின், விஜயகுமார், துணை செயலாளர் ராஜேந்திர நாடார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகத்துடன் திருஏடு வாசிப்பு திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story