கெலமங்கலம் அருகே பயிர்களை சேதம் செய்த 85 யானைகள் விவசாயிகள் கவலை


கெலமங்கலம் அருகே பயிர்களை சேதம் செய்த 85 யானைகள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 29 Dec 2019 4:15 AM IST (Updated: 29 Dec 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே பயிர்களை சேதம் செய்த 85 யானைகள் விவசாயிகள் கவலை.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜக்கேரி ஊராட்சிக்கு உட்பட்டது ஒன்னுகுறுக்கை. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து 85 யானைகள் நேற்று முன்தினம் இரவு ஒன்னுகுறுக்கை கிராமத்திற்கு வந்தன. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தின. இதில் விவசாயி கோபால் என்பவரின் 4 ஏக்கர் ராகி பயிர்களும், முனிரத்னா, சென்றாயன் ஆகியோரின் தலா ஒரு ஏக்கர் ராகி பயிர்களும், மற்றொரு விவசாயி சென்றாயன் என்பவரின் 2 ஏக்கர் ராகி பயிர்களும் சேதமடைந்தது. முனியாத்புரத்தில் விவசாயி ராமமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் புகுந்த யானைகள் அங்கு 4 ஏக்கரில் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த முட்டைகோஸ்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. நேற்று காலை தங்களின் விளை நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.

வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். யானைகளின் தொடர் அட்டகாசத்தால் கெலமங்கலம் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story