நகை தொழிலாளியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி வெள்ளி கட்டிகள் கொள்ளை - வாலிபர் கைது
பட்டாபிராம் அருகே நகை தொழிலாளியிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி 2 வெள்ளி கட்டிகளை கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி,
திருவள்ளூர் தேரடிஅகரம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). வெள்ளி நகை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னை பிராட்வே பகுதியில் உள்ள ஒரு கடையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரண்டு வெள்ளி கட்டிகளை வாங்கிய கார்த்திக், புறநகர் மின்சார ரெயிலில் பட்டாபிராம் பாரதியார் நகர், கலைவாணர் தெருவில் உள்ள மாமனார் வீட்டுக்கு செல்வதற்காக இந்து கல்லூரி ரெயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கு இறங்கினார்.
அங்கிருந்து அவர் நடந்து சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், “நாங்கள் போலீஸ். உனது பையை சோதனை செய்ய வேண்டும்” என்றனர். அதற்கு கார்த்திக் மறுத்தார். ஆனாலும் அவர்கள் வலுக்கட்டாயமாக கார்த்திக்கிடம் இருந்த பையை சோதனையிட முயன்றனர்.
உடனே கார்த்திக், போலீஸ் உதவி மையம் அருகில்தான் உள்ளது. அங்கு வைத்து விசாரணை நடத்துங்கள் என்று கூறி மர்மநபர்கள் 2 பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென மர்மநபர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க பயன்படுத்தும் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி, கார்த்திக்கிடம் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கட்டிகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடமுயன்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக், திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிவந்து ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிடிபட்ட வாலிபருக்கு அங்கிருந்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், திருச்சி விராலிமலையை அடுத்த பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (32) என்பதும், தப்பி ஓடிய அவரது கூட்டாளியின் பெயர் பாட்ஷா என்பதும் தெரியவந்தது. சுரேசை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நானும், பாட்ஷாவும் சிறையில் இருக்கும்போது நண்பர்கள் ஆனோம். சில தினங்களுக்கு முன்பு பாட்ஷா, எனக்கு போன் செய்து, பெரிய அளவில் கொள்ளையடித்து செட்டில் ஆகிவிடலாம் என்று அழைத்தார். அதை கேட்டு சென்னை வந்த நான், செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் திருடியபோது மீஞ்சூர் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 நாட்களுக்கு முன்புதான் பாட்ஷா என்னை ஜாமீனில் வெளியே எடுத்து வந்தார்.
அதன்பிறகு கார்த்திக் வெள்ளி நகை தொழிலாளி என்பதை அறிந்து நாங்கள் இருவரும் 2 நாட்களாக அவரை பின்தொடர்ந்து சென்றோம். அவரிடம் வழிப்பறி செய்து செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து சென்னையில் இருந்து வெள்ளி கட்டிகளுடன் வந்த அவரை ரெயிலில் பின்தொடர்ந்து வந்து கொள்ளையடிக்க முயன்றபோது பொதுமக்கள் என்னை பிடித்து போலீசில் கொடுத்து விட்டனர். பாட்ஷா தப்பி ஓடிவிட்டார்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்த பட்டாபிராம் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 வெள்ளி கட்டிகள் மற்றும் பொம்மை துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள சுரேஷின் நண்பர் பாட்ஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story