மதுரை ராணுவ வீரர் அசாமில் மரணம்
மதுரை ராணுவ வீரர் அசாம் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ளது எம்.கல்லுப்பட்டி சாணார்பட்டி. இந்த ஊரைச்சேர்ந்த மொக்கேட்டு என்பவரது மகன் வெற்றிப்பாண்டி(வயது22).
பிளஸ்-2 முடித்த அவர் அதன் பின்பு ராணுவத்தில் சேர விருப்பப்பட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெற்றிப்பாண்டி இறந்து விட்டதாக பெற்றோருக்கு ராணுவத்திலிருந்து தகவல் வந்துள்ளது. தகவல் கேட்டதும் பெற்றோர் துக்கம் தாளாமல் கதறினர். இந்த சம்பவத்தால் எம்.கல்லுப் பட்டிசாணார்பட்டி கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வெற்றிப்பாண்டிக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் உள்ளனர்.
ராணுவத்தில் பனிப்பொழிவில் சிக்கி இறந்தாரா, உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா என்பது இதுவரை தெரியவில்லை. இறந்த வெற்றிப்பாண்டி உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.
Related Tags :
Next Story