சீருடையில் மது அருந்திய வீடியோ வெளியானதால் 3 மாணவிகள்- மாணவர் கல்லூரியில் இருந்து நீக்கம்


சீருடையில் மது அருந்திய வீடியோ வெளியானதால் 3 மாணவிகள்- மாணவர் கல்லூரியில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 6:39 PM GMT)

சீருடையில் மது அருந்திய வீடியோ வெளியானதால் மயிலாடுதுறையை சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் 3 மாணவிகளும் சேர்ந்த கல்லூரிக்கு வெளியே ஒரு வீட்டில் அமர்ந்து கல்லூரி சீருடையில் மது அருந்தினர்.

இதை யாரோ ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பினார். மாணவருடன் சேர்ந்து 3 மாணவிகள் மது அருந்திய காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதால் அவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

நீக்கம்

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் கல்லூரி முதல்வர் தலைமையில் துறை தலைவர்கள் பங்கேற்ற ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்லூரி விதிமுறைகளுக்கு மாறாகவும், கல்லூரி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்ட ஒரு மாணவர், 3 மாணவிகள் ஆகியோரை கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்குவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கல்லூரி சீருடையில் மது அருந்திய 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவரை வருகிற 2-ந் தேதி(வியாழக்கிழமை) முதல் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story