ராணிப்பேட்டையில் கார் மோதி மூதாட்டி சாவு - தாய், மகள் படுகாயம்
ராணிப்பேட்டையில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா வெடியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (வயது 22) நர்சிங் படித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜெயஸ்ரீ ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு துணையாக ஜெயஸ்ரீயின் தாய் மேரி (45), பாட்டி அம்சா (70) ஆகியோரும் வந்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலை அருகே உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அம்சாவை பரிசோதித்த டாக்டர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெயஸ்ரீயும், மேரியும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story