அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே கேட் கீப்பர் மீது சரமாரி தாக்குதல் பொதுமக்கள் சாலைமறியல்
அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த கேட் கீப்பரை வாலிபர்கள் சரமாரியாக தாக்கினர். இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மூலக்குளம்,
புதுவை முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 55). இவர் புதுவை அரும்பார்த்தபுரம் புதுத்தெருவில் உள்ள ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை 4 மணியளவில் தேவசகாயம் பணியில் இருந்தபோது புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு செல்லும் பயணிகள் ரெயிலுக்காக கேட்டை மூடினார்.
சரமாரி தாக்குதல்
ரெயில் வர தாமதமானதால் அங்கு மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் கேட் கீப்பர் தேவசகாயத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அது கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
இதற்கிடையே அந்த வாலிபர்கள் தங்களின் நண்பர்களுக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த 4 வாலிபர்கள் இணைந்து தேவசகாயத்தை சரமாரியாக தாக்கினார்கள்.
இது குறித்து அங்கு நின்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டனர். இவர்களையும் அந்த வாலிபர்கள் தாக்கினர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
சாலைமறியல்
இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த 6 வாலிபர்கள் தப்பிச்செல்ல முயன்றனர். இதில் 2 பேர் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அரும்பார்த்தபுரம் புதுத்தெரு ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
4 பேருக்கு வலைவீச்சு
பொதுமக்களிடம் சிக்கிய 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story