தேசிய குடியுரிமை பதிவேட்டால் 98 சதவீத எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது
தேசிய குடியுரிமை பதிவேட்டால் 98 சதவீத எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
தானே,
தேசிய குடியுரிமை பதிவேட்டால் 98 சதவீத எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பாதிக்கப்படுவார்கள் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவாத் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் போராட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கல்வா-மும்ரா பகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு அமைத்த கமிட்டியின் அறிக்கைப்படி 98 சதவீத எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சமுதாயத்தினரிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் தேசிய குடியுரிமை பதிவேடு தவறாக சென்றவிட கூடும்.
2 கோடி மக்கள்
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் மராட்டியத்தில் உள்ள எஸ்.சி, எஸ்.டி சமூகங்களைச் சேர்ந்த 2 கோடி மக்கள் தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் தான் என்று எப்படி நிரூபிக்கவேண்டும் என்று நீங்கள்(பாரதீய ஜனதா) எதிர்பார்க்கிறீர்கள்? வரும் நாட்களில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிரான போராட்டங்கள் திட்டவட்டமாக வலுப்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பற்றி தனது அரசு ஆலோசிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அசாமில் மட்டுமே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தது குறிப்படத்தக்கது.
Related Tags :
Next Story