உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவுக்கு மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை


உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவுக்கு மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 30 Dec 2019 4:30 AM IST (Updated: 30 Dec 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மும்பை, 

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான இவர், ராணுவ மந்திரியாகவும் இருந்து உள்ளார். 80 வயதான முலாயம் சிங் யாதவுக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப் படுகிறது.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வயிற்று கோளாறு

இது குறித்து அவருக்கு நெருங்கிய ஒருவர் கூறுகையில், ‘‘முலாயம் சிங் யாதவுக்கு வயிற்று கோளாறு ஏற்பட்டது. அதற்காக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் மும்பை வந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று (அதாவது நேற்று) அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம். எனினும் டாக்டர்கள் முழு சோதனை முடித்த பிறகு தான் அது குறித்து உறுதியாக தெரியும்’’ என்றார்.

Next Story