வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது
வேப்பந்தட்டை- ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வேப்பந்தட்டை,
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27-ந் தேதி நடந்து முடிந்தது. அதன்படி அன்றைய தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த வாக்குப்பதிவில் 77.40 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில்பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 29 கிராம ஊராட்சிகளுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 39 கிராம ஊராட்சிகளுக்கும் நேற்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
கடந்த 23-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலின்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 1,02,266 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 88,766 வாக்காளர்கள் உள்ளனர். வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 544 பதவியிடங்களுக்கு 1,567 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று ஒரு சில இடங்களை தவிர மற்ற வாக்குச்சாவடி மையங்களில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
நீண்ட வரிசையில் காத்திருந்து...
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்கு பெட்டிகளின் சீல்களை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உடைத்து, வாக்கு பெட்டியை திறந்து காண்பித்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டியை சீல் வைத்து, வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்குப்பதிவு தொடங்கியவுடன் பலர் ஆர்வத்துடன் தங்களது வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்தனர். இதனால் தொடக்கத்திலேயே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதனால் காலையிலேயே பல வாக்குச்சாவடி மையங்களில் ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது.
ஆனால் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். முன்னதாக வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் இடது கையின் நடுவிரலில் அழியாத மை இடப்பட்டது. வாக்காளர்கள் பலர் காலை 11 மணிக்கு முன்பாக வந்த தனது வாக்கினை பதிவு செய்தனர். காலையில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடை பெற்றது.
வாக்கு பெட்டிகள் அனுப்பி வைப்பு
பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்த வாக்கு பெட்டிகள் வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி, அதற்கான வாக்கு எண்ணும் மையமான உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டிகள் லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன், அதற்கான வாக்கு எண்ணும் மையமான பாடாலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story