கோயம்பேடு மார்க்கெட் நுழைவு வாயிலில் நடைபாதை இரும்பு குழாய்களுக்கு இடையே வியாபாரியின் கால் சிக்கியது


கோயம்பேடு மார்க்கெட் நுழைவு வாயிலில் நடைபாதை இரும்பு குழாய்களுக்கு இடையே வியாபாரியின் கால் சிக்கியது
x
தினத்தந்தி 31 Dec 2019 3:45 AM IST (Updated: 31 Dec 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு பூ, பழம், காய்கறி மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் ஆடு, மாடுகள் நுழையாமல் தடுக்க தரையில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

பூந்தமல்லி,

இந்தநிலையில் தள்ளுவண்டியில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்துவரும் முருகன்(வயது 40) என்ற வியாபாரி, நேற்று அதிகாலை கோயம்பேடு மார்க்கெட் வந்தார். அவர், தள்ளுவண்டியில் கொய்யா பழங்களை வைத்து தள்ளியபடி எண் 18-ல் உள்ள நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதை இரும்பு குழாயில் நடந்து சென்றார்.

அப்போது அவர், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இரும்பு குழாய்களுக்கு இடையே அவரது இடது கால் சிக்கிக்கொண்டது. காலை எடுக்க முடியாமல் அவர், வலியால் அலறி துடித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து எந்திரம் மூலம் இரும்பு குழாய்களை வெட்டி எடுத்து, வியாபாரி முருகனை பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story