குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், பெண்கள் கோலமிட்டு போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், பெண்கள் கோலமிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2019 11:00 PM GMT (Updated: 30 Dec 2019 8:29 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில்,் பெண்கள் கோலமிட்டு போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,

குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளின் முன்பு கோலமிடப்பட்டது.

தஞ்சையிலும் எதிர்ப்பு கோலம்

தஞ்சை அருளானந்த நகரிலும் நேற்று வேண்டாம் சி.ஏ.ஏ., வேண்டாம் என்.ஆர்.சி. என கோல மாவால் எழுதப்பட்டு அதன் அருகே கோலமிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் 3 வீடுகளின் முன்பு கோலமிடப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் அந்த வீடுகளில் யாரும் இல்லை. இருப்பினும் கோலத்தை வரைந்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story