இறந்த தந்தைக்கு பதில் மகன் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம்: வாக்களிக்க முடியாமல் தொழிலாளி ஏமாற்றம்


இறந்த தந்தைக்கு பதில் மகன் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம்: வாக்களிக்க முடியாமல் தொழிலாளி ஏமாற்றம்
x
தினத்தந்தி 30 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-31T02:09:39+05:30)

இறந்த தந்தைக்கு பதில் மகன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் தொழிலாளி திரும்பி சென்றார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கோ.வல்லுண்டாம்பட்டு ஊராட்சியில் உள்ளது வேங்குராயன்குடிக்காடு. இந்த ஊரை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் மாரிமுத்து(வயது50) தொழிலாளி. இவருக்கு பூத் சிலிப் வழங்கவில்லை.

இருப்பினும் மாரிமுத்து நேற்று காலை வாக்களிப்பதற்காக, வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு, வேங்குராயன் குடிக்காடு அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றார்.

பெயர் நீக்கம்

அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அவருடைய பெயரை வாக்காளர் பட்டியலில் பார்த்தபோது நீக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மாரிமுத்துவின் தந்தை வீரையன் இறந்து விட்டார்.

ஆனால் அவருடைய பெயரை நீக்குவதற்கு பதிலாக அவரது மகன் மாரிமுத்துவின் பெயர் நீக்கப்பட்டு வீரையனின் பெயர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

ஏமாற்றத்துடன் திரும்பினார்

இது குறித்து மாரிமுத்துவிடம் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர்.. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Next Story