நெடுவாசல் மேற்கு ஊராட்சி பெண் வேட்பாளர் திடீர் மரணம் தேர்தல் நாளன்று பரிதாபம்
நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீரென உடலநலக்குறைவால் பரிதாபமாக இறந்தார்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் மேற்கு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன். இவரது மனைவி மல்லிகா (வயது 42). இவர் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்டார். கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக பேராவூரணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மல்லிகா நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில், நள்ளிரவுக்கு பிறகு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் உறவினர்கள் நேற்று காலை மீண்டும் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஆனால் வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.
வாக்குச்சீட்டில் சின்னம் மறைப்பு
இதையடுத்து இறந்த மல்லிகாவின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடந்தது.
வேட்பாளர் இறந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக வாக்குச்சீட்டிலும், வாக்காளர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த போஸ்டரிலும் மல்லிகாவின் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் ஆகியவற்றை அழித்தனர். மேலும், மல்லிகா இறந்துவிட்டதாக போஸ்டரில் எழுதப்பட்டது.
வாக்குப்பதிவு நாளில் பெண் வேட்பாளர் உடல்நலக்குறைவால் இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story