ஜிப்மரில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மத்திய சுகாதார மந்திரி தகவல்


ஜிப்மரில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மத்திய சுகாதார மந்திரி தகவல்
x
தினத்தந்தி 31 Dec 2019 4:15 AM IST (Updated: 31 Dec 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என என மத்திய சுகாதார நலத்துறை மந்திரி அஸ்வினிகுமார் சொபே தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் புதிதாக ரூ.22 கோடி செலவில் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரூ.8 கோடி செலவில் சி.டி. ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளது. இந்த அதி நவீன மருத்துவ சேவை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய சுகாதார மற்றும் நலத்துறை மந்திரி அஸ்வினி குமார் சொபே கலந்துகொண்டு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் சேவையை ெதாடங்கி வைத்தார். இதில் எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், வைத்திலிங்கம், சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் மத்திய சுகாதார மற்றும் நலத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சொபே பேசியதாவது:-

ஜிப்மரில் உலக தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது ஜிப்மரில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் முதன் முறையாக நோயாளிகளுக்காக அதி நவீன மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜிப்மர், தென்னிந்தியாவின் எய்ம்ஸ் மருத்துவமனையாக திகழ்கிறது. ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வரவேற்றார். மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே மற்றும் அனைத்து மருத்துவ துறை தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story