பிரியங்கா காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பா.ஜ.க.வின் சர்வாதிகாரத்துக்கு மக்கள் சக்தி முடிவு கட்டும் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி


பிரியங்கா காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம்: பா.ஜ.க.வின் சர்வாதிகாரத்துக்கு மக்கள் சக்தி முடிவு கட்டும் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
x
தினத்தந்தி 31 Dec 2019 4:30 AM IST (Updated: 31 Dec 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

பிரியங்கா காந்தி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் நமச்சிவாயம், ஆணவத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் மக்கள் சக்தி முடிவு கட்டும் என்று தெரிவித்துள்ளார். புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடி கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை பெண் என்றும் பார்க்காமல் உத்தரப்பிரதேச அரசு போலீசாரை ஏவிவிட்டு காட்டுமிராண்டித் தனமாக தாக்கி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

காந்தி பயணித்த அகிம்சை வழியில் போராடிய ஆற்றல்மிக்க தலைவி பிரியங்கா காந்தி மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட உத்தரப்பிரதேச பாரதீய ஜனதா அரசை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டிக்கிறேன். ஆணவத்துக்கும், அடக்குமுறைக்கும், சர்வாதிகாரத்துக்கும் மக்கள் சக்தி முடிவு கட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறனே்.

தாய்நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு சுதந்திரம் பெற பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த நேரு, ரத்தம் சிந்திய இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்ற தலைவர்கள் எல்லாம் வழிநடத்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது அநாகரீகமாக காவல்துறையை ஏவிவிட்டு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருப்பது உத்தரப்பிரதேச அரசுக்கு வெட்கக்கேடானது.

பாசிச பாரதீய ஜனதாவின் பூச்சாண்டிகளை நூற்றாண்டு கண்ட காங்கிரஸ் பேரியக்கம் துணிவுடன் எதிர்கொண்டு முறியடிக்கும். மதவாத, பிரிவினைவாத பாரதீய ஜனதாவின் சுயரூபத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்பதை புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story