மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு + "||" + Vandalism in Nagercoil: Theft of Sami statues breaking temple door

நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு

நாகர்கோவிலில் துணிகரம்: கோவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருட்டு
நாகர்கோவிலில் கோவில் கதவை உடைத்து வெண்கல சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டாரை அடுத்த மேல சரக்கல்விளை பகுதியில் சுயம்புலிங்க சாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடைபெறும். இதில் அந்த பகுதியை ேசர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.


நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு வழக்கம் போல் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

நேற்று காலை கோவிலுக்கு சென்ற போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பூஜை பொருட்கள் சிதறி கிடந்தன.

சிலைகள் திருட்டு

கோவிலில் இருந்த வெண்கலத்தினால் செய்யப்பட்ட விநாயகர் மற்றும் அம்மன் சிலைகள் திருடப்பட்டிருந்தன. இரவில் மர்ம நபர்கள் கதவை உடைத்து சாமி சிலைகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவிலில் பதிவாகி இருந்த ேரகைகள் பதிவு செய்யப்பட்டன.

கண்காணிப்பு ேகமரா

இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமி சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ேகாவில் கதவை உடைத்து சாமி சிலைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

1. தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க பள்ளம் தோண்டி தடுப்புகள்
பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தலைத் தடுக்க மாட்டு வண்டிகள் செல்லும் பாதையில் பள்ளம் தோண்டி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2. கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு: சேலத்தில் 7 வாலிபர்கள் கைது
சேலம் மாநகரில் கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகள் திருட்டு
கல்லக்குடியில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
உப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
5. சேலத்தில் அடுத்தடுத்து சம்பவம்: மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
சேலத்தில் மேலும் 4 கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.