காளைகளுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் - ஜல்லிக்கட்டு வீரர்கள் கோரிக்கை
ஜல்லிக்கட்டு காளை களுக்கு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து வீரர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மதுரை,
ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் சார்பில் ஜல்லிக்கட்டு வீரர்கள் காளை மாடுகளுடன் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு கலெக்டர் இல்லாததால் அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இனப் பெருக்கம் மற்றும் எதற்கும் பயன்படாத காளைகளை, வளர்க்க கூடாது என்றும், மீறி வளர்த்தால் அதனை வளர்ப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. மேலும் அந்த சட்டத்தில் இது போன்ற காளைகளை அரசே வதம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே போல் ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story