பெரம்பலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: 2 கட்டமாக பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் 2 கட்டமாக நடந்த வாக்குப்பதிவுகள் நாளை எண்ணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கல்லூரியிலும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்குப் பெட்டிகள் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு பெட்டிகள் அனைத்தும் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்குப் பெட்டியில் இருந்து எடுத்து எண்ணப்பட உள்ளன. அதன்படி தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட்டு, அதனை தொடர்ந்து வாக்குப் பெட்டியில் உள்ள பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
பாதுகாப்பு
வாக்கு எண்ணும் பணிகளில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் முதலில் தபால் வாக்குகள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் முன்னிலையில் பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. மேலும் ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன், அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்த சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படுகிறது.
இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களான பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்கள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும், அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள், வாக்கு எண்ணும் மையம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கான அறைகள் ஆகியவை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும், அந்த வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயில் முதல் வாக்கு எண்ணும் மையம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு சோதனை சாவடிகள், மேலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அமைக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்கு வருபவர்கள் அனைவரையும் போலீசார் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிப்பார்கள். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story