சாலவாக்கம் அருகே சாலையோரம் அனாதையாக வீசப்பட்ட ஆண் குழந்தை


சாலவாக்கம் அருகே சாலையோரம் அனாதையாக வீசப்பட்ட ஆண் குழந்தை
x
தினத்தந்தி 1 Jan 2020 4:30 AM IST (Updated: 31 Dec 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

சாலவாக்கம் அருகே சாலையோரம் அனாதையாக வீசப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று அனாதையாக சாலையோரம் வீசப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் சாலையோரம் கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை மீட்டு சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தன் ஒத்துழைப்புடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த குழந்தை சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்ற கோணத்தில் சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story