நாளை வாக்கு எண்ணிக்கை: சாத்தூரில் வாக்கு பெட்டிகள் ைவக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு


நாளை வாக்கு எண்ணிக்கை: சாத்தூரில் வாக்கு பெட்டிகள் ைவக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 4:00 AM IST (Updated: 1 Jan 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சாத்தூர்,

சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 184 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 53 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது.

வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். சாத்தூர் ஒன்றியத்தில் அனைத்து பகுதிகளிலும் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு செய்யப் பட்டு முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் போலீசார் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகளை சாத்தூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரே அறையில் அனைத்து வாக்கு பெட்டிகளும் வைக்கப்பட்டு அறையை பூட்டி தேர்தல் அதிகாரி மகேஷ்வரன் சீல் வைத்தார். அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாத்தூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. நாளை(வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறுகிறது. 12 அறைகள் வாக்கு எண்ணும் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

Next Story