மாவட்ட செய்திகள்

புத்தாண்டு பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் + "||" + 1,500 policemen working in security in Nagai district on New Year's Eve

புத்தாண்டு பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

புத்தாண்டு பண்டிகையையொட்டி நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
நாகை மாவட்டத்தில், புத்தாண்டு பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் விபத்தில்லாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். இதற்காக மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களான வேளாங்கண்ணி, நாகூர், வேதாரண்யம், பொறையார், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருக்கடையூர் உள்ளிட்ட 66 இடங்களில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


முக்கிய தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 12 சாலை பாதுகாப்பு குழுக்கள், மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்ஒரு பகுதியாக நாகை புதிய கடற்கரையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் பொருட்டு மணலில் செல்லக்கூடிய ரோந்து வாகனங்கள் உதவியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியாக யாரேனும் கூட்டத்தில் சுற்றித்திரிந்தால், உடனே போலீசாரை பொதுமக்கள் தொடர்ப்பு கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புதுவை அருகே காதல் விவகாரம்: வாலிபரை கடத்தி கொன்று உடல் எரிப்பு தப்பி ஓடிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுவை அருகே காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்திச் சென்று கொலை செய்து உடலை எரித்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
2. கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது
கிரு‌‌ஷ்ணகிரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமையில் நடந்தது.
3. நாமக்கல்லுக்கு பிளஸ்-2 வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன 10 மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
நாமக்கல்லுக்கு நேற்று பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வினாத்தாள்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டன. இவை வைக்கப்பட்டு உள்ள 10 மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
4. திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவர் கைது
தாத்தா சொத்தை கொடுக்க தந்தை மறுப்பதாக கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
5. ‘எரிபொருட்களை பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பு தேவை’ - இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பேச்சு
எரிபொருட்களை பயன்படுத்தும்போது முறையான பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும் என இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன் தெரிவித்தார்.