ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமரா - கலெக்டர் தகவல்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 220 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருநகர் 3-வது பஸ் நிறுத்தத்தில் உள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தல் பார்வையாளர் சுப்பையன், கலெக்டர் வினய் ஆகியோர் அதனை பார்வையிட்டனர். அப்போது திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் ஆஷிக் உடனிருந்தார்.
இதனை தொடர்ந்து கலெக்டர் வினய் நிருபர்களுக்கு ேபட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. வாக்குப்பெட்டிகள் 13 ஒன்றியங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை ஏஜெண்டுகள் பார்க்கும் வகையில் வைத்துள்ளோம். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2 கட்டத்திலும் 78.32 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் வாக்கு எண்ணும் மையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிக்குள் 4000 ஏஜெண்டுகள் அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து விதங்களிலும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
Related Tags :
Next Story