குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு
x
தினத்தந்தி 31 Dec 2019 10:45 PM GMT (Updated: 31 Dec 2019 8:39 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பெண்கள் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருவாரூர்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய கோலங்களை வரைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோலமிட்ட பெண்கள் சிலரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேண்டாம் என்.ஆர்.சி.

இந்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு நெய் விளக்கு தோப்பு பகுதியில் உள்ள சில வீடுகள் முன்பு நேற்று காலை பெண்கள் கோலமிட்டு குடியிருப்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்களை எழுதி இருந்தனர்.

என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு), சி.ஏ.ஏ. (குடியுரிமை திருத்த சட்டம்) வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள், கோலங்கள் அருகே எழுதப்பட்டிருந்தன.

Next Story