அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி புத்தாண்டை கொண்டாட சென்ற போது பரிதாபம்
புத்தாண்டை கொண்டாட சென்ற போது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜீயபுரம்,
பெட்டவாய்த்தலை அருகில் உள்ள காவல்காரன்பாளையத்தை சேர்ந்த பாக்கியராஜின் மகன் நவீன்குமார்(வயது 20). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துவந்தார். அதே பகுதியை சேர்ந்த மணியின் மகன் ரத்தினசாமி(20). திருச்சியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவரும், நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி அளவில் புத்தாண்டு கொண்டாட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ரத்தினசாமி ஓட்ட, நவீன்குமார் பின்னால் அமர்ந்து இருந் தார். அவர்கள்,பெட்டவாய்த்தலை அரும்புகள் நகர் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சென்று, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டனர்.
அரசு பஸ் மோதி 2 பேர் பலி
அங்கிருந்து சற்று தூரத்தில் திருச்சி-கரூர் சாலையில் சென்ற போது, அந்த வழியாக திருச்சியில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்தினசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள், நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெட்டவாய்த்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
டிரைவர் கைது
பின்னர் ரத்தினசாமி, நவீன்குமாரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவரான கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரை(36) கைது செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story