வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு சிறப்பு முகாம்கள் நடைபெறஉள்ளது என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார். கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை,
1.1.2020-ம்தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்காக வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளிலும், 11 மற்றும் 12-ந்தேதிகளிலும் சிறப்பு முகாம் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்திட, பெயா் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய ஆவண நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story