விருத்தாசலம், மந்தாரக்குப்பத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


விருத்தாசலம், மந்தாரக்குப்பத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2020 3:30 AM IST (Updated: 2 Jan 2020 1:19 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் மற்றும் மந்தாரக்குப்பத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மந்தாரக்குப்பம், 

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் பாலக்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். வக்கீல் பு‌‌ஷ்பதேவன், செல்வம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு வட்டார நிர்வாகி செந்தாமரைகந்தன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் மந்தாரக்குப்பம் நான்குமுனை சந்திப்பில் அனைத்து அரசியல் கட்சி யினர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை திரும்ப பெறக் கோரியும் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர். 

Next Story