உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணன் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தனசேகர், தி.மு.க. ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இலக்கியதாசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்பட பலரும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வாக்கு எண்ணும் இடத்தில் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைதியாகவும், ஒழுங்காகவும் நடந்து கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மட்டுமே பாதுகாப்பு அறையை பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தனக்காக ஒரு முகவரை மட்டுமே நியமனம் செய்ய முடியும், வேட்பாளர் அல்லது அவரது முகவர் மட்டுமே வாக்கு எண்ணிக்கையின் போது இருக்க முடியும், மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள், 5 முகவர்கள் வரை வாக்கு எண்ணிக்கைக்காக நியமனம் செய்து கொள்ளலாம். வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவதற்கான அனுமதி சீட்டை முன்கூட்டியே பெறவேண்டும். முகவர்களுக்கான அனுமதி சீட்டானது ஒருநாள் மட்டுமே அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டுமே செல்லுபடியாகும். முகவர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் இங்க் பேனா, கைப்பேசி உள்ளிட்டவைகள் எடுத்து வரக்கூடாது. முகவர்கள் தங்களுடன் ஒரு பென்சில் மற்றும் சிறிய நோட்டு புத்தகம் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு எந்த வாகனங்களும் நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் தொடர்புடைய வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் வாக்கு எண்ணும் அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் ஒன்றிய பொருத்துனர் சிபி ராஜா நன்றி கூறினார்.

Related Tags :
Next Story