பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Jan 2020 10:30 PM GMT (Updated: 1 Jan 2020 9:35 PM GMT)

பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பனையடி பட்டியைச் சேர்ந்தவர் சுவாமி நாதன் காமராஜ் (வயது57). கூலி தொழிலாளி. சாத்தூர் படந்தாளை சேர்ந்தவர் தாயம்மாள் (40). இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே தாயம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுவாமிநாதன் காமராஜ் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்் தேதி இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது அவர், தாயம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் சுவாமி நாதன் காமராஜை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, தொழிலாளி சுவாமிநாதன் காமராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story