மாவட்ட செய்திகள்

சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆங்கில புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் + "||" + A special pooja at Salem temples is celebrated by the devotees of the Sami with the New Year

சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆங்கில புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை ஆங்கில புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டையொட்டி சேலம் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்,

ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதியதாக பிறந்த புத்தாண்டு வளமான ஆண்டாகவும், நோய் நொடியின்றி மகிழ்ச்சியான ஆண்டாகவும் அமைய வேண்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதையொட்டி சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் சாமிக்கு விசே‌‌ஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.


சேலம் கோட்டை பெருமாள் என்றழைக்கப்படும் அழகிரிநாத சுவாமி கோவிலில் மூலவர் பெருமாள், தாயார், ஆண்டாள், கருடாழ்வார் சாமிகளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

காவடி பழனியாண்டவர் ஆசிரமம்

சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள எல்லைபிடாரி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு தங்க கவசம் மற்றும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோட்டை பெருமாள் கோவிலில் சாமிக்கு பு‌‌ஷ்ப கிரீட அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஸ்தம்பட்டியில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று சாமிக்கு 64 திரவியங்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவித்து பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் முன்னிலையில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பிறகு ஐஸ்வர்யேசுவரர் பூஜையும், மாலையில் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

தர்மசாஸ்தா ஆசிரமம்

சேலம் டவுன் ரெயில்வே ஸ்டே‌‌ஷன் அருகில் அமைந்துள்ள அய்யப்பன் பஜனை மண்டலி ஸ்ரீதர்மசாஸ்தா ஆசிரமத்தில் புத்தாண்டையொட்டி அய்யப்பனுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அய்யப்பனுக்கு பு‌‌ஷ்பாஞ்சலி நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு படி பூஜை நடந்தது. அதாவது, சபரிமலையில் நடப்பது போலவே முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி படிபூஜை நடத்தி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்தனர்.

சேலம் பெரமனூரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பெருமாளுக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

ராஜகணபதி நகர்

சேலம் மணக்காடு ராஜகணபதி நகரில் உள்ள ராஜகணபதி கோவிலில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், ஊத்துமலை முருகன் கோவில், குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணிய சாமி கோவில், பாண்டுரெங்கநாதர் கோவில், பட்டைக்கோவில், நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில், சேலம் ராஜாராம் நகர் தேவராஜ கணபதி கோவில், சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில், வெண்ணங்குடி முனியப்பன் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தொடர்புடைய செய்திகள்

1. வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைத்திக்குப்பம் கடற் கரையில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் மயிலம், செஞ்சி, மேல்மலையனூர் உள்பட முக்கிய கோவில்களில் இருந்து எழுந்தருளிய உற்சவர்களை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
2. தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
3. அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
தஞ்சை பெரியகோவிலில் நேற்று கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
5. திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு திரளான பக்தர்கள் தரிசனம்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.