மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தாமதம்; தி.மு.க. கூட்டணியினர் சாலை மறியல்
மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பில் தாமதமானதை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் கரட்டுப்பட்டியில் உள்ள குறிஞ்சி என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. நேற்று வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் எடுக்கப்பட்டு, காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து மற்றவாக்குகள் எண்ணப்பட்டன.
மாலை 3.30 மணி வரை சில வார்டுகளின் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டும், அதன் முடிவுகள் அறிவிக்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.கூட்டணி கட்சியினர், கல்லூரி எதிரே உள்ள திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
முடிவுகள் அறிவிப்பு
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் அதிகாரிகளிடம் கூறி, முடிவுகள் உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து 3 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வையம்பட்டி ஒன்றியம்
இதேபோல் வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் ஆலத்தூரில் உள்ள ஆதவன் கலைக்கல்லூரியில் எண்ணப்பட்டன. மாலை 4 மணிக்கு மேல் ஆகியும் சில வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க.கூட்டணி கட்சியினர், கல்லூரிக்கு எதிரே உள்ள திருச்சி-திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story