பவானி ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்து: கேரள பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு


பவானி ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்து: கேரள பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 2 Jan 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

பவானி ஆற்றில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் காயம் அடைந்த கேரள பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றிஇறந்தார்.ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்து

கோவை,

கேரள மாநிலம்பாலக்காடு அருகேபெருந்தல்மன்னாபகுதியை சேர்ந்தவர் வினோத் பாண்டியராஜ், மத்திய கலால்துறை அதிகாரி. இவருடைய மனைவி சர்மிளா. இவர்களுக்கு ரையனீஸ் (வயது 4) என்ற மகன் உள்ளார். சர்மிளாஅட்டப்பாடிவனச்சரகத்தில்வன அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்றுசர்மிளாமுக்காலியில் இருந்துசெம்மனூரில்உள்ள அலுவலகத்திற்கு ஜீப்பில் சென்றார். ஜீப்பை உபைது என்பவர் ஓட்டி சென்றார். ஜீப்செம்மனூர்பவானி ஆற்றுப்பாலத்தில்சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகஓடி திடீரென்றுஆற்றுக்குள்கவிழ்ந்தது.பெண்அதிகாரி பலி

இதில் ஜீப்பில் இருந்த 2 பேரும் வெளியில்வரமுடியாமல்தவித்தனர். இதை பார்த்தஅப்பகுதிமக்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து டிரைவர்உபைதுவைஆபத்தான நிலையில் மீட்டனர்.சர்மிளாவைமீட்பதில் சிரமம் ஏற்பட்டது.நீண்டநேரபோராட்டத்திற்கு பிறகு சர்மிளாவையும் மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவர்கள் 2பேரையும்ஆம்புலன்ஸ்மூலம்பெருந்தல்மன்னாஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது.

டிரைவர் உபைது கடந்த 27-ந் தேதிசிகிச்சை பலனின்றிஇறந்தார். அதிகாரிசர்மிளாவுக்குடாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில்சிகிச்சை பலனின்றிசர்மிளாநேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முக்காலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story