மாவட்ட செய்திகள்

நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் பதவி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் தோல்வி + "||" + President of the Central Bank Digg MLA The son failed

நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் பதவி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் தோல்வி

நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் பதவி: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் தோல்வி
நடுக்கோம்பையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் தோல்வி அடைந்தார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் நடுக்கோம்பை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை நேற்று சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணினர். அதில் வேட்பாளர் அ.தி.மு.க.வை சேர்ந்த யுவராஜ் (சந்திரசேகரன் எம்.எல்.ஏ. மகன்) ஒரு தபால் ஓட்டுடன் சேர்த்து 802 ஓட்டுகள் பெற்று இருந்தார்.


மற்றொரு வேட்பாளரான தி.மு.க.வை சேர்ந்த அழகப்பன் 5 தபால் ஓட்டுகளை சேர்த்து 806 ஓட்டுகள் பெற்றதால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வாக்குவாதம்

அப்போது வேட்பாளர் யுவராஜ், அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் சிலர், சில ஓட்டுகள் காணாமல் போய் உள்ளது, நீங்கள் செல்லாதவையாக அறிவித்த 31 ஓட்டுகள் சரியாக பார்க்கப்பட்டதா? எனவும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், எனவும் உதவி தேர்தல் அலுவலர் பு‌‌ஷ்பராஜிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதை கேட்ட சேந்தமங்கலம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோக்குமார், வேட்பாளர் அழகப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தேர்தல் அதிகாரிகள், பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் எண்ணப்பட்ட வாக்குகள் எப்படி தவறாக இருக்க முடியும்?, எனவே தேர்தல் முடிவினை உடனே அறிவியுங்கள் என்று, அவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

அப்போது அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தீபா, செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசினார்கள். இதையடுத்து இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
முதலமைச்சர் பழனிசாமி பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை: பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் வேண்டுமென்றே இந்தியா தோற்றதாக சொல்லவில்லை என்று பாகிஸ்தான் வீரருக்கு பென் ஸ்டோக்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
3. ஐ.எஸ்.எல். கால்பந்தில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பெங்களூரை தோற்கடித்து கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. புரோ லீக் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
புரோ லீக் ஆக்கி போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.