கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமமிட்டு உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமமிட்டு உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 4:30 AM IST (Updated: 3 Jan 2020 1:35 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நாமமிட்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சி,

கடந்த 2016-ம் ஆண்டு வறட்சியின் காரணமாக தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் 7 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டம் தொடர்பாக போலீசாரிடம் அனுமதி பெற்றிருந்தனர்.

அதன்படி திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று உண்ணாவிரதத்தை விவசாயிகள் தொடங்கினர். இதில் விவசாயிகள் சிலர் கோவணம் கட்டியும், உடலில் நாமமிட்டும் பங்ேகற்றனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்த விவசாயி களிடம் உதவி கலெக்டர் (பொறுப்பு) அன்பழகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றினால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக, அய்யாக்கண்ணு தெரிவித்தார். இன்று (வெள்ளிக்கிழமை) கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும், தொடர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் உதவி கலெக்டர் கூறினார்.

இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு உண்ணாவிரதத்தை முடிப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். அதன்படி மாலை 6 மணி வரை விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர் கலைந்து சென்றனர். போராட்டம் தொடர்பாக இன்று கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

Next Story