பெரம்பலூரில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி


பெரம்பலூரில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 2 Jan 2020 10:30 PM GMT (Updated: 2 Jan 2020 8:09 PM GMT)

பெரம்பலூரில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 27 வார்டுகளை தி.மு.க.வும், 16 வார்டுகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றின. மேலும் அ.ம.மு.க. ஒரு வார்டிலும், சுயேச்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவி மொத்தம் 14 உள்ளது. இதில் 1-வது வார்டு மலர்கொடி (தி.மு.க.), 2-வது வார்டு மீனாம்பாள் (தி.மு.க.), 3-வது வார்டு செல்வகுமாரி (தி.மு.க.), 4-வது வார்டு கலையரசன் (தி.மு.க.), 5-வது வார்டு சாந்தாதேவி (தி.மு.க.), 6-வது வார்டு வசந்தா (அ.ம.மு.க.), 7-வது வார்டு அருணா பாண்டியன் (அ.தி.மு.க.), 8-வது வார்டு ராஜேந்திரன் (தி.மு.க.), 9-வது வார்டு பாப்பாத்தி (தே.மு.தி.க.), 10-வது வார்டு தேவகி (தி.மு.க.), 11-வது வார்டு சாம்குமார் (தி.மு.க.), 12-வது வார்டு பிரியா (அ.தி.மு.க.), 13-வது வார்டு சக்தி (அ.தி.மு.க.), 14-வது வார்டு தெய்வமணி (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1-வது வார்டு கருப்பையா (தி.மு.க.), 2-வது வார்டு பழனிவேல் (தி.மு.க.), 3-வது வார்டு ஆண்டாள் (தி.மு.க.), 4-வது வார்டு பூங்கொடி (அ.தி.மு.க.), 5-வது வார்டு சுப்பிரமணியன் (பா.ம.க.), 7-வது வார்டு செல்வராணி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), 8-வது கலா (பா.ம.க.), 14-வது வார்டு அழகுதுரை (அ.தி.மு.க.), 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க.), 20-வது வார்டு உமா (தி.மு.க.), 22-வது வார்டு தனலட்சுமி (தி.மு.க.), 23-வது வார்டு மணிகண்டன் (சுயேச்சை) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்களில்...

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1-வது வார்டு ரங்கராஜ் (தி.மு.க.), 2-வது வார்டு ராலிங்கம் (தி.மு.க.),

4-வது வார்டு நவமணி (அ.தி.மு.க.), 5-வது வார்டு சின்னதுரை (தி.மு.க.), 7-வது வார்டு ராமேஸ்வரி (அ.தி.மு.க.), 8-வது வார்டு கோவிந்தராஜ் (தி.மு.க.), 9-வது வார்டு கீதா (தி.மு.க.), 12-வது வார்டு செல்லம் (தி.மு.க.), 15-வது வார்டு மாலதி (பா.ம.க.), 17-வது வார்டு ராஜேந்திரன் (தி.மு.க.), 18-வது வார்டு தேவகி (பா.ம.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1-வது வார்டு லதாசீனிவாசன் (தி.மு.க.), 3-வது வார்டு அஞ்சலிதேவிகுணசேகர்(அ.தி.மு.க.), 4-வது வார்டு திருநாவுகரசு (அ.தி.மு.க.), 5-வது வார்டு ஜெயலட்சுமிராமசாமி (அ.தி.மு.க.), 6-வது வார்டு செல்விதங்கராசு (தி.மு.க.), 7-வது வார்டு சுசீலாமுருகேசன் (அ.தி.மு.க.), 8-வது வார்டு இளவரசன் (தி.மு.க.), 9-வது வார்டு கலைச்செல்விஜோதிவேல் (தி.மு.க.), 10-வது வார்டு சத்தியா (தே.மு.தி.க.), 15-வது வார்டு சேகர் (தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து இரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதால் மற்ற வார்டுகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Next Story