குளத்துப்பாளையத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


குளத்துப்பாளையத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 2 Jan 2020 10:45 PM GMT (Updated: 2 Jan 2020 8:21 PM GMT)

குளத்துப்பாளையத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கரூர்,

கரூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. காவிரி பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சரவணன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் கரூர், குளித்தலை, புகளூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

இதில் முதல் பரிசை அன்னை ஸ்போர்ட்ஸ் அணியும், இரண்டாவது பரிசை பஞ்சமாதேவி சந்தோஸ் அணியும், மூன்றாம் பரிசை கும்மாயம்பட்டி அணியும், நான்காவது பரிசை குளித்தலை வெண்புறா அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் வ.உ.சி. பேரவை மாவட்ட தலைவர் மகேஸ்வரன், சண்முகம், கொங்கு இளைஞர் பேரவை அருள் ஆகியோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினர். கபடி போட்டியை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர். கபடி போட்டியையொட்டி கரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Next Story