திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு 500 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் - மருத்துவ அலுவலர் தகவல்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 500 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது என மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, கந்திலி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திர மாநிலமான குப்பம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் அதிகளவில் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக சேர்க்கப்படுகிறார்கள்.
இங்கு தினமும் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 1-ந் தேதி இரவு 12 மணி வரை 24 குழந்தைகள் புத்தாண்டு தினத்தில் புது மலர்களாக பிறந்துள்ளது. சுகப்பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 ஆண் குழந்தைகளும், 8 பெண் குழந்தைகளும் அடங்கும். அதேபோன்று அறுவை சிகிச்சை மூலம் 4 ஆண் குழந்தைகளும், 8 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வகுமார் கூறுகையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு 500 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் சிறுநீரக பையில் வெடிப்பு ஏற்பட்டதால், உடனடியாக தாய் மற்றும் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது என்றார்.
அப்போது டாக்டர்கள் சுமதி, சாந்தி, ராதா, ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story