கேளம்பாக்கத்தை அடுத்த படூர்: கார் கவிழ்ந்து விபத்து
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் வெங்கப்பாக்கம் அடுத்த புதிய பாலத்தையொட்டிய தரைப்பாலத்தில் அவரது கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
கல்பாக்கம்,
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 31) இவர் கல்பாக்கத்தை அடுத்த பவுஞ்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக தனது காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். வெங்கப்பாக்கம் அடுத்த புதிய பாலத்தையொட்டிய தரைப்பாலத்தில் அவரது கார் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் அந்த கார் இடது பக்கம் பள்ளத்தில் கவிழ்ந்தது. காரை ஓட்டி வந்த டாக்டர் சாந்தகுமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். சதுரங்கப்பட்டினம் போலீசார் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த காரை அப்புறப்படுத்தினர்.

Related Tags :
Next Story