நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் சாவு பாப்பாரப்பட்டி அருகே சோகம்
பாப்பாரப்பட்டி அருகே நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பாப்பாரப்பட்டி,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம், விவசாயி. இவருடைய மகன் மோனீஷ் (வயது 16). இவன் அந்த பகுதியில் உள்ள பரம்வீர் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாணவன் தனது நண்பர்கள் 3 பேருடன் அதேபகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். இந்த கிணற்றில் சுமார் 30 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. மாணவர்கள் குளித்தபோது மோனீஷ் கிணற்றின் மேலே இருந்து உள்ளே குதித்தான்.
தண்ணீரில் மூழ்கி சாவு
பின்னர் அவன் வெகு நேரமாகியும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவனை மீட்க முயன்றனர். அப்போது மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பாப்பாரப்பட்டி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story