சின்னசேலத்தில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட 170 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - வியாபாரிகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்


சின்னசேலத்தில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட 170 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - வியாபாரிகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 4 Jan 2020 4:15 AM IST (Updated: 3 Jan 2020 9:22 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரிகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

சின்னசேலம்,

ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் சின்னசேலம் பேரூராட்சிக்கு உள்பட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சின்னசேலம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, துப்புரவு மேற்பார்வையாளர்கள் செந்தில்குமார், சுரே‌‌ஷ், இளநிலை உதவியாளர் அண்ணாமலை ஆகியோர் சின்னசேலம் பேரூராட்சிக்கு உள்பட்ட சேலம் மெயின் ரோடு, ஆ.மூங்கில்பாடி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், சுவீட் கடைகள், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது 170 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்திய மளிகைக் கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதமாக 6 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தனர்.

அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள நேரிடும் என கடைக்காரர் களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story