திருமருகல் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவி: அதிக இடங்களை தி.மு.க. கைப்பற்றியது


திருமருகல் ஒன்றியத்தில் ஊராட்சி தலைவர் பதவி: அதிக இடங்களை தி.மு.க. கைப்பற்றியது
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 4 Jan 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருமருகல் ஒன்றியத்தில் நடந்த ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிக இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

திருமருகல், 

திருமருகல் ஒன்றியத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது. இதில் 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கும், 16 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கும், 39 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 291 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் 155 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணும் பணி திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் வருமாறு:-

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கான 13-வது வார்டில் அஜிதா ராஜேந்திரன்(தி.மு.க), 14-வது வார்டில் சரபோஜி(இ.கம்யூனிஸ்டு) வெற்றி பெற்றுள்ளது.

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களிலும், தி.மு.க. 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி 1-வது வார்டு- திருமேனி(அ.தி.மு.க.), 2-வது வார்டு- இந்திராஅருள்மணி(அ.தி.மு.க.),

3-வது வார்டு- ஜெயந்தி சாமிநாதன்(அ.தி.மு.க.), 4-வது வார்டு-பெரியமணி(அ.தி.மு.க.), 5-வது வார்டு-லதா அன்பழகன்(தி.மு.க.),

6-வது வார்டு- பேபிசரளா பக்கிரிசாமி(அ.தி.மு.க.), 7-வது வார்டு- சுஜாதா ஆசைத்தம்பி(அ.தி.மு.க.), 8-வது வார்டு-அபிநயா அருண்குமார்(தி.மு.க.), 9-வது வார்டு- சுல்தான்ஆரிபு (அ.தி.மு.க.), 10-வது வார்டு- இளஞ்செழியன்(தி.மு.க.), 11-வது வார்டு- ராதாகிரு‌‌ஷ்ணன் (அ.தி.மு.க.), 12-வது வார்டு-சிவகாமசுந்தரி திருநீலகண்டன்(அ.தி.மு.க.), 13-வது வார்டு-சரவணன்(தி.மு.க.), 14-வது வார்டு- மணிவண்ணன் (தி.மு.க.), 15-வது வார்டு- மஞ்சுளா மாசிலாமணி(இ.கம்யூனிஸ்டு).

ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டவர்கள் 25 இடங்களிலும், அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்டவர்கள் 11 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Next Story