திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது


திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது
x
தினத்தந்தி 4 Jan 2020 4:00 AM IST (Updated: 4 Jan 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றியது.

திருவாரூர், 

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திருவாரூர் ஒன்றியத்திற்கான மாவட்ட ஊராட்சி உறுப்பினர்-2, ஒன்றியக்குழு உறுப்பினர்-14, ஊராட்சி மன்ற தலைவர்-34, ஊராட்சி வார்டு உறுப்பினர்-237 என மொத்தம் 287 பதவிக்கான தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திருவாரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான 14 இடங்களில் தி.மு.க.-10, மா£க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி-1, அ.தி.மு.க.-3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

வெற்றி பெற்ற ஒன்றியக்கழு உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

1-வது வார்டு வாசுகி (தி.மு.க.), 2-வது வார்டு குணசேகரன் (தி.மு.க.), 3-வது வார்டு தியாகராஜன் (தி.மு.க.), 4-வது வார்டு பத்மபிரியா (தி.மு.க.), 5-வது வார்டு ரேவதி (தி.மு.க.), 6-வது வார்டு முருகேசன் (தி.மு.க.), 7-வது வார்டு தெளலத் (தி.மு.க.), 8-வது வார்டு தேவா (தி.மு.க.) 9-வது வார்டு மணிகண்டன் (அ.தி.மு.க.), 10-வது வார்டு வனிதா (அ.தி.மு.க.), 11-வது வார்டு சிவக்குமார் (தி.மு.க.), 12-வது வார்டு நடராஜன் (அ.தி.மு.க.), 13-வது வார்டு லலிதா (தி.மு.க.) 14-வது வார்டு வசந்தா (மா.கம்யூனிஸ்டு) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பா.ஜனதா, தே.மு.தி.க. உள்பட 21 பேர் டெபாசிட் தொகையை இழந்தனர். இதில் 2,882 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. 8-வது வார்டு வேட்பாளர் தேவா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தலில் பெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

அடியக்கமங்கலம்-கஸ்தூரி, அலிவலம்-நிர்மலா, ஆமூர்-செல்வமணி, ஆத்தூர்-ஜெயபால், கல்லிக்குடி-லெட்சுமி, கல்யாணமகாதேவி-தவமணி, கல்யாணசுந்தரபுரம்-மதியழகன், கீழகாவாதுகுடி-ஜெயலட்சுமி, கொட்டாரக்குடி-மாதவி, கூடூர்-விஜயலட்சுமி, குன்னியூர்-சுந்தரபாண்டியன், மாங்குடி-சித்ரா, நடப்பூர்-செந்தமிழ்செல்வி, ஒடாச்சேரி- நெல்சன் மண்டேலா, பழவனக்குடி-இளவரசன், பழையவலம்-அருமைகண்ணு, பள்ளிவாரமங்கலம்-கலைச்செல்வி, பெருங்குடி-மேரிசுகுணாவதி, புதூர்-கோவிந்தராசு, புதுபத்தூர்-ராஜசேகரன், புலிவலம்-காளிமுத்து. பின்னவாசல்-தியாகராஜன், சேமங்கலம்-முருகானந்தம், செருகுடி-அம்சவள்ளி, தண்டலை-நாக ராஜன், தப்பாளம்புலியூர்-கணேசமூர்த்தி, திருக்காரவாசல்-செந்தில்குமார், திருநேய்பேர்-ஜெயக்குமார், திருவாதிரைமங்கலம்-பழனியம்மாள், உமாமகேஸ்வரபுரம்-அனித்தா, வடகரை-மலர், வைப்பூர்-பாவாடைராயன், வேலங்குடி-மகாலெட்சுமி, வேப்பத்தாங்குடி-சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவாரூர் ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 12-வது வார்டில் கருணாகரன் (தி.மு.க.), 13-வது வார்டில் பாலசுப்பிரமணியன் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 2 மாவட்ட ஊராட்சி பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

Next Story