துறையூர், லால்குடி ஊராட்சி ஒன்றியங்களில், தலைவர் பதவியை பிடிப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே இழுபறி
துறையூர், லால்குடி ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவியை பிடிப்பதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஒன்றியங்களில் சுயேச்சைகளின் ஆதரவு யாருக்கு என்று கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், உப்பிலியபுரம், தா.பேட்டை, திருவெறும்பூர், துறையூர், தொட்டியம், புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, முசிறி, லால்குடி, வையம்பட்டி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மொத்தம் 241 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக கடந்த 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அந்தந்த ஒன்றியங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் நள்ளிரவு வெளியான முடிவுகளில் வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விவரம்(அடைப்புக்குறிக்குள் கட்சி) வருமாறு:-
அந்தநல்லூர் ஒன்றியத்தில் 8-வது வார்டில் வளர்மதி (இந்திய கம்யூனிஸ்டு), 11-வது வார்டில் சரஸ்வதி (தி.மு.க.), 12-வது வார்டில் சண்முகவடிவு (தி.மு.க.), 13-வது வார்டில் துரைராஜ் (தி.மு.க.), 14-வது வார்டில் பழனியாண்டி (தி.மு.க.) ஆகியோரும், உப்பிலியபுரம் ஒன்றியத்தில் 8-வது வார்டில் ஹேமலதா (தி.மு.க.), 12-வது வார்டில் லலிதா (அ.தி.மு.க.), 13-வது வார்டில் கண்ணதாசன்(சுயே.), 14-வது வார்டில் ரேணுகாதேவி(சுயே.), 15-வது வார்டில் மு.சந்திரா (தி.மு.க.) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
துறையூர் ஒன்றியத்தில் 3-வது வார்டில் லலிதா (அ.தி.மு.க.), 8-வது வார்டில் சரண்யா(த.மா.கா.), 9-வது வார்டில் தங்கராஜ் (அ.தி.மு.க.), 13-வது வார்டில் மோகன் (அ.தி.மு.க.), 15-வது வார்டில் பேபி (தி.மு.க.), 16-வது வார்டில் புவனேஸ்வரி (சுயே.), 17-வது வார்டில் சுப்பிரமணியன் (தி.மு.க.), 18-வது வார்டில் சரண்யா (தி.மு.க.), 19-வது வார்டில் மகேஸ்வரி (தே.மு.தி.க.) ஆகியோரும், தொட்டியம் ஒன்றியத்தில் 19-வது வார்டில் ஆர்.மல்லிகாவும் (தி.மு.க.) வெற்றி பெற்றனர்.
புள்ளம்பாடி ஒன்றியத்தில் 10-வது வார்டில் சந்திரா (தி.மு.க.), 11-வது வார்டில் கனகராஜ் (தி.மு.க.), 13-வது வார்டில் செல்வமேரி (அ.தி.மு.க.) ஆகியோரும், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 7-வது வார்டில் ருக்கியாபி (தி.மு.க.), 14-வது வார்டில் ஆறுமுகம் (தே.மு.தி.க.), 15-வது வார்டில் ஐஸ்வர்யா (சுயே.), 16-வது வார்டில் புஷ்பராணி (தி.மு.க.), 17-வது வார்டில் சாந்தி (தி.மு.க.), 18-வது வார்டில் லதா (தி.மு.க.), 21-வது வார்டில் கவிதா (தி.மு.க.), 22-வது வார்டில் அம்பிகாவதி (தி.மு.க.), 23-வது வார்டில் சந்திரா (அ.தி.மு.க.) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
மணப்பாறை ஒன்றியத்தில் 16-வது வார்டில் கலைச்செல்வி (தி.மு.க.), 17-வது வார்டில் ரபீக்ராஜா (தி.மு.க.) ஆகியோரும், மணிகண்டம் ஒன்றியத்தில் 10-வது வார்டில் தனலட்சுமியும் (தி.மு.க.), முசிறி ஒன்றியத்தில் 9-வது வார்டில் மாலா (தி.மு.க.), 10வது வார்டில் அம்புஜவள்ளி (தி.மு.க.), 11-வது வார்டில் ஜானகி (தி.மு.க.), 12-வது வார்டில் சரவணன் (தி.மு.க.), 13-வது வார்டில் ராதிகா (அ.தி.மு.க.), 14-வது வார்டில் ஆறுமுகம் (அ.தி.மு.க.), 15-வது வார்டில் குமார் (தி.மு.க.), 16-வது வார்டில் சின்னப்பொண்ணு (அ.தி.மு.க.) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
லால்குடி ஒன்றியத்தில் 6-வது வார்டில் ரேணுகா (அ.தி.மு.க.), 7-வது வார்டில் செல்வராஜ் (தி.மு.க.), 9-வது வார்டில் சோபனா (அ.தி.மு.க.), 10-வது வார்டில் முத்துசெழியன் (தி.மு.க.), 11-வது வார்டில் பாலாஜி (அ.தி.மு.க.), 14-வது வார்டில் இசைவாணி (அ.தி.மு.க.), 15-வது வார்டில் சின்னத்துரை (தி.மு.க.), 16-வது வார்டில் ரவிச்சந்திரன் (தி.மு.க.), 17-வது வார்டில் குண சீலன்(சுயே.) 18-வது வார்டில் மேரிகிறிஸ்டினாள் (தி.மு.க.) 19-வது வார்டில் பிரியா (தி.மு.க.), 21-வது வார்டில் நிவாஸ் (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வையம்பட்டி ஒன்றியத்தில் 5-வது வார்டில் குணசீலன் (தி.மு.க.), 6-வது வார்டில் முத்துலட்சுமி (சுயே.), 9-வது வார்டில் சரோஜா (தி.மு.க.), 10-வது வார்டில் செல்வி (அ.தி.மு.க.), 11-வது வார்டில் மோகனபட்டத்தரசி (தி.மு.க.), 12-வது வார்டில் அழகன் (தி.மு.க.), 13-வது வார்டில் ஸ்ரீவித்யா (காங்கிரஸ்), 15-வது வார்டில் ராமன் (சுயே.), 16-வது வார்டில் அழகர் (தி.மு.க.) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 12 ஒன்றியங்களை தி.மு.க. கைப்பற்றியது. இதன் மூலம் அந்த ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க.வினர் சுலபமாக கைப்பற்றி விடுவார்கள். ஆனால் மீதமுள்ள துறையூர், லால்குடி ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை தி.மு.க.வினர் கைப்பற்றுவதில் இழுபறி நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறையூர் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளில் 9 வார்டுகளை தி.மு.க.வும், 8 வார்டுகளை அ.தி.மு.க. கூட்டணியும் பெற்றுள்ளன. இதனால் மீதமுள்ள 2 வார்டுகளை சுயேச்சைகள் பிடித்துள்ளனர். இதுபோல் லால்குடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 10 வார்டுகளை தி.மு.க.வும், 8 வார்டுகளை அ.தி.மு.க. கூட்டணியும், 3 வார்டுகளை சுயேச்சைகளும் பிடித்துள்ளனர்.
இதனால் இருவார்டுகளிலும் தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுயேச்சைகள் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்களோ அந்த கட்சியே தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக 2 ஒன்றியங்களிலும் சுயேச்சைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவர்கள் ஆதரவு அளிக்கும் கட்சியினர் இவர்களுக்கு ஒருவேளை தலைவர் அல்லது துணை தலைவர் பதவி கூட வழங்க வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story