மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை + "||" + Near Thiruchendur, Female Suicide by drinking poison

திருச்செந்தூர் அருகே, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை

திருச்செந்தூர் அருகே, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை
திருச்செந்தூர் அருகே மகன் தகராறு செய்ததால் மனமுடைந்த பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி கூழ பெரியவன்விளையைச் சேர்ந்தவர் ஆத்திக்கண் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி தேவகி (43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகன், பிளஸ்-1 படித்து விட்டு, கூலி வேலைக்கு சென்று வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லவில்லை.

இதனை தாயார் கண்டித்தார். இதனால் தாய்-மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தேவகி சம்பவத்தன்று தனது வீட்டில் வி‌‌ஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தேவகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மகன் தகராறு செய்ததால், தாய் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மண்ணிவாக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
மண்ணிவாக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டம்
திருக்காட்டுப்பள்ளி அருகே கணவர் உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத மாமனாரை கண்டித்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. ஆத்தூர் அருகே, விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
4. கடலூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதல்; பெண் பலி பொதுமக்கள் பஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
கடலூர் ஆல்பேட்டையில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வீட்டு செலவுக்கு கணவர்-மகன்கள் பணம் கொடுக்காததால் சோக முடிவு
ஆத்தூர் அருகே வீட்டு செலவுக்கு கணவரும், மகன்களும் பணம் கொடுக்காமல் வீணாக செலவு செய்ததால் மனமுடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.