மாவட்ட செய்திகள்

பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவ - மாணவிகள் காயம் + "||" + Near Ponneri The van accident 10 student injuries

பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவ - மாணவிகள் காயம்

பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவ - மாணவிகள் காயம்
பொன்னேரி அருகே வேன் கவிழ்ந்து 10 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.
பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பஞ்சட்டி கிராமத்தில் வேலம்மாள் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மாணவ-மாணவிகளை தனியார் வேன் மூலம் அழைத்து வருகின்றனர்.

நேற்று காலை மீஞ்சூர் பகுதியில் இருந்து மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் வேன் பொன்னேரியை அடுத்த பெருஞ்சேரி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது.

திருவொற்றியூர் - பொன்னேரி- பஞ்சட்டி நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த குருவப்பா மீது வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் அவரது கால் முறிந்தது.

வேனில் இருந்த மாணவ - மாணவிகள் 10 பேர் காயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.